தங்கள் நிலத்தைப் பறிகொடுத்த பலஸ்தீனர்கள் உணவு உள்ளிட்ட தங்களது ஒவ்வொரு கலாச்சார அடையாளத்தையும் பிடிவாதத்துடன் பற்றிக் கொண்டிருக்கின்றனர்.
என்றேனும் ஒரு நாள் தங்களுக்கான நிலமும் தேசமும் வாய்க்கும் வரை இந்த அடையாளங்கள் மட்டுமே அவர்களுக்கான ஆறுதல்.
இஸ்ரேல் – பாலஸ்தீன போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் குழந்தைகள் மரணித்துள்ளார்கள் அங்கு இடம்பெற்றுவரும் போர் தீவிரம் குறித்து விளக்கும் அழகிய உணர்வுபூர்வமான கவிதையை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம்.
ஒரு குழந்தையின்…
சாம்பல் அள்ளப்படுகிறது…
ஒரு குருவியின்…
கால்கள் கருகியிருக்கிறது…
கருங்கற்களின் இடுக்கில்…
தளிர் விரல்கள் நசுங்கிக்கிடக்கிறது…
அந்த வயோதிபர் முதுகில்…
மூன்று ஏவுகணை புகுந்திருக்கிறது…
எனினும்…
ஏதும் சொல்லாதீர்கள்…
ஏனெனில் அவர்கள்…
ஹமாஸுக்கே அடிக்கிறார்கள்..!!
பெண்கள் அல்ல..!
ஹமாஸின் தாய்மார்…
எனவேதான் கொல்கிறார்கள்…!
குழந்தை அல்ல…!
ஹமாஸின் பிள்ளைகள்…
அதனால்தான் அழிக்கிறார்கள்…!
பலஸ்தீன் அல்ல…!
ஹமாஸின் இருப்பிடம்…
ஆகையால்தான் ஆக்கிரமிக்கிறார்கள்…!!
விஷயம் விளங்காமல்…
வீண் பேச்சுப் பேசாதீர்கள்…!!
ஹமாஸ் உண்பதால் தான்…
உணவை தடுக்கிறார்கள்…!
ஹமாஸ் குடிப்பதால் தான்…
நீரை நிறுத்தினார்கள்…!
ஹமாஸ் படிப்பதால் தான்…
பாடசாலையை எரிக்கிறார்கள்…!!
அறிவில்லாமல் நீங்கள்..
அவர்களை ஏசாதீர்கள்…!!
இத்தனை பரிதாபமாய்…
படுகொலைகள் பார்த்ததில்லை…!
இப்படி ஒர் சவக்குழியை
வாழ்நாளில் கண்டதில்லை…!
உயிர்களை ஒருவன்
உயிரோடு எரிக்கையில்…
உலகமே வேடிக்கை பார்க்கும்
நாட்களை நாம் கடந்ததில்லை…!
ஒரு மிருகம் கூட…
தன் இனத்தை தாமே அழிக்கும்…
தவறை செய்ததாய் கேள்விப்பட்டதில்லை…
எனினும் இங்கே…
எல்லாமே அனுமதி…
ஏனெனில் அவர்கள்…
ஹமாஸுக்கே அடிக்கிறார்கள்..!!!
‘பிர்அவ்னின்’ தேசத்தில்…
‘மூஸா’ ஓர் ‘டெரரிஸ்ட்’ தான்.. …!!
எங்கே போனது
உலகத்தின் இதயம்…?
எங்கே கிடக்கிறது….
மனித உரிமை இயக்கம்…
எங்கே தொலைந்தது…
UNO சத்தம்…
எப்போது செத்தது…
மொத்தமாய் மனித நேயம்…!!