எரிவாயு விலை அதிகரிப்புடன், உணவுப்பொதி , கொத்து, மற்றும் பல உணவுகளின் விலைகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் கூற்றுப்படி , ஒரு ‘பிளேன் டி’ யின் விலை 10 ரூபாவினாலும், கொத்து ஒன்றின் விலை 20 ரூபாவினாலும், உணவுப்பொதி ஒன்றின் விலை 50 ரூபாவினாலும் அதிகரிக்கப்படும்.