பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இன்று ஒக்டோபர் 27 ஆம் திகதி ‘காஷ்மீர் கறுப்பு தினத்தை ‘ குறிக்கும் வகையில் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்ச்சியானது பாகிஸ்தானின் தேசிய கீதத்துடன் ஆரம்பமானது, அதனைத் தொடர்ந்து காஷ்மீர் தேசிய கீதமும் இடம்பெற்றது.
இதன்போது இந்நிகழ்ச்சியில், இந்திய சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீரில் இந்தியப் படைகள் செய்த மனிதாபிமானமற்ற முறையில் மக்களை நடத்துத்வதையும் அட்டூழியங்களைச் சித்தரிக்கும் பதாகைகள், பெனர்கள், புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
இதனையடுத்து பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் செய்திகளும் பார்வையாளர்களுக்காக வாசிக்கப்பட்டன.
கருத்தரங்கில் அரசியல் செயற்பாட்டாளரும் முஸ்லிம் விவகார தேசிய ஒருங்கிணைப்பாளருமான ஷிராஸ் யூனுஸ் அவர்கள் உரையாற்றினார்.
பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உமல் பாருன் புர்கி தெரிவிக்கையில்,
ஜம்மு- காஷ்மீரில் பல தசாப்தங்களாக இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு எதிரான நியாயமான போராட்டத்திற்காக ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு மரியாதை செலுத்தினார் மற்றும் காஷ்மீரிகளுக்கு பாகிஸ்தானின் தார்மீக, அரசியல், சுயநிர்ணய உரிமை மற்றும் இராஜதந்திர ஆதரவை மீண்டும் வலியுறுத்தினார்.
கண்காட்சி மற்றும் கருத்தரங்கின் நோக்கத்தை விளக்கிய அவர், பாகிஸ்தானும் அந்நாட்டு மக்களும் நமது காஷ்மீர் சகோதர சகோதரிகளுடன் தங்கள் இதயங்களிலும் மனதிலும் ஒன்றுபட்டுள்ளனர் என்றார்.
இறுதியாக, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி, துருக்கி தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி திருமதி ராகிபே டெமட் செகெர்சியோக்லு வெளிநாட்டு தூதுவர்கள் தொழில் வல்லுநர்கள் பத்திரிகையாளர்கள் எழுத்தாளர்கள், காஷ்மீரின் இலங்கை வாழ் ஆதாரவாளர்கள் மற்றும் பாகிஸ்தான் சமூகத்தினர் என பல்வேறு தரப்பு மக்களும் கலந்து கொண்டனர்.