சீனா பயணமாகும் ஜனாதிபதி!

Date:

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஒக்டோபர் 16ஆம் திகதி சீனா  பயணிக்கவுள்ளார். சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உள்ளிட்ட பல தலைவர்களை இதன்போது சந்திக்கவுள்ளார்.

பெல்ட் அண்ட் ரோட் முயற்சியின் 10ஆவது ஆண்டு உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கடன் நிவாரணம் தொடர்பில் சீன ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

சீனாவிடமிருந்து கடன் நிவாரணத்தைப் பெறுவதில் இலங்கை சவால்களை எதிர்கொண்டுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

என்றாலும், இருதரப்புக் கடனை மறுசீரமைக்கும் பொறிமுறை குறித்து கலந்துரையாடல்கள் தொடர்வதாக ஜனாதிபதி அலுவலகத்தின் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த 12 மாதங்களில் இரண்டு தடவைகள் அண்டை நாடான ஜப்பானுக்கு விஜயம் செய்திருந்த போதிலும், கடந்த வருடம் பதவியேற்ற பின்னர் ஜனாதிபதி விக்கிரமசிங்க சீனாவிற்கு மேற்கொண்ட முதலாவது விஜயம் இதுவாகும்.

Popular

More like this
Related

ஹஜ் பயண முகவர் சங்கத்தின் தலைவராக அல்ஹாஜ் அம்ஜடீன் தெரிவு

2025 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஹஜ் முகவர் சங்கத்தின் தலைவராக அம்ஜா...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (17) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர்...