தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (15) காலை 9.30 இற்கு ஆரம்பமாகவுள்ளது.
நாடளாவிய ரீதியில் 2,888 பரீட்சை நிலையங்களில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளது.
குறித்த பரீட்சையில் 337,956 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து மாணவர்களும் காலை 9 மணிக்கு பரீட்சை மண்டபத்திற்கு வருகைத்தருமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவுறுத்தியுள்ளார்.
இதனிடையே, சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மாத்தறை, அக்குரஸ்ஸ மற்றும் முலட்டியான ஆகிய கல்வி வலயங்களில் பிரதேச செயலகங்கள் ஊடாக மாணவர்கள் பரீட்சைக்குத் தொற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார்.