அரச சேவையிலுள்ள தாதியர்களை 60 வயதில் கட்டாய ஓய்வில் அனுப்புவதற்கு அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்கி மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி, அரசாங்கத்தின் தீர்மானத்துக்கமைய ஏற்கனவே 60 வயதில் ஓய்வுபெற்ற தாதியர்களை அந்தந்த பதவிகளில் மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் ஆயம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.