அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் இதுவரை 45 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (18) பாராளுமன்றத்தில் இந்த விடயத்தை தெரிவித்தார்.
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் கடந்த 3ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
குறித்த சட்டமூலமானது நாட்டின் சில அறிக்கைகளில் தகவல் தொடர்புகளைத் தடைசெய்வதனை நோக்கமாகக் கொண்டுள்ளது என விமர்சம் முன்வைக்கப்பட்டது.
அத்துடன், இந்த சட்டமூலம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவலை தெரிவித்தன.
இந்த நிலையிலே, கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, சோசலிச இளைஞர் சங்கம், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்திம பண்டார, பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் பல ஊடகவியலாளர்களினால் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டன.
இதனிடையே, நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் அமுல்படுத்தப்படும் நிலையில் இலங்கை பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.