பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் விபத்து: ஸ்தலத்திலே ஒருவர் பலி

Date:

ஏறாவூர் மிச்நகர் பிரதான வீதி புகையிரத கடவையில் இன்று மட்டக்களப்பில் இருந்து மாகோ நோக்கி பயணித்த புகையிரத்தில் முச்சக்கரவண்டி மோதுண்டு  38 வயதுடைய அப்துல் றகுமான் முகம்மது றமீஸ் என்பவர் ஸ்தலத்திலே உயிரிழந்தார்.

உயிரிழந்த நபர் ஏறாவூர் மீராகேணியை வதிவிடமாக கொண்டவராவர்.

இக்கடவை பாதுகாப்பற்ற கடவையாக பல மாதங்களாக காணப்படும் நிலையில் இத்துயர சம்பவம் இன்று நிகழ்ந்துள்ளது.


இவருடைய மரணம் போன்று மற்றுமொரு உயிர் போய்விடக்கூடாது என்ற அடிப்படையில் பிரதேச மக்களால் “பாதுகாப்பான புகையிரத கடவை வேண்டும்’ உரிய அதிகாரிகள் தீர்வினை பெற்றுத்தர வேண்டும் எனக் கோரி ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

சடலம் தற்போது ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

தகவல்- உமர் அறபாத்- ஏறாவூர்.

Popular

More like this
Related

ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு புதிய கட்டுப்பாடுகள்!

பொது நிகழ்வுகளின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான கால  காலவரையறைகள் குறித்து பொலிஸ்...

டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை அறிமுகம்

இலங்கையின் முதலாவது டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை மே முதலாம் திகதி...

வெசாக் தினத்தை முன்னிட்டு தன்சல் பதிவுகள் ஆரம்பம்!

வரவிருக்கும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ள அன்னதானங்கள்...