பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படவுள்ள கிழக்கு பல்கலைக்கழகம்!

Date:

இலங்கைக் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 42ஆவது வருடத்தை முன்னிட்டு நேற்று (01) தொடக்கம் எதிர்வரும் 8ஆம் திகதி வரை பல்வேறு நிகழ்வுகளுடன் கூடிய பல்கலைக்கழக வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் கனகசிங்கம் வல்லிபுரம் தெரிவித்தார்.

அதன்படி, பல்கலைக்கழக வாரத்தை விசேடமாகக் கொண்டாடும் நோக்கில் பல்கலைக்கழக வரலாற்றில் முதல் தடவையாக பிராந்தியத்திலுள்ள சமூகத்தினருக்காக எதிர்வரும் ஒக்டோபர் 3ஆம் திகதியினை திறந்த நாளாக நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டில் பிரகடனப்படுத்தப்பட்டள்ள ஒக்டோபர் 3ஆம் திகதி திறந்த நாள் பொதுமக்கள் கிழக்குப் பல்கலைக்கழகத்தைப் பார்வையிடும் ஒரு சிறந்த சந்தர்ப்பத்தினை மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், சிறு முயற்சியாண்மையாளர்கள், விவசாயிகள், மீன்பிடித் தொழிலாளர்கள், சிறுகைத்தொழில் உற்பத்தியாளர்கள் என பல்கலைக்கழகத்தைப் பார்வையிடுவதற்கு ஆர்வமுள்ள சகலரும் பங்குபற்றி கிழக்கு பல்கலைக்கழம் தொடர்பான தெளிவினைப் பெற்றுக்கொள்ளலாம்.

இத்திறந்த நாளில் தொழில் வழிகாட்டல் மற்றும் உளவளத்துறை ஆலோசனை, விஞ்ஞான ரீதியான பரிசோதனைகளும், பிரயோக விளக்கங்களும், கல்வி சார் சூழல் தொடர்பான பூரணமான அவதானம், வாசிகசாலை வசதிகள், தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம், பல்கலைக்கழக அனுமதி தொடர்பான அணுகுமுறைக்கான வழிகாட்டல்கள் மற்றும் பல்கலைக்கழகம் மற்றும் கல்விசார் அனுபவப் பகிர்வுகள் போன்ற விடயங்கள் தொடர்பான தெளிவான விளக்கங்கள் வழங்கப்படவுள்ளது.” என தெரிவித்தார்.

Popular

More like this
Related

ஷானி அபேசேகர பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி...

புத்தளத்தில் ‘அத்தம’ தூய்மை வேலைத்திட்டம் ஆரம்பம்: அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு!

பண்டைய இலங்கையில் நிலவிய பரஸ்பர உதவி மற்றும் கூட்டுப் பொறுப்பை அடிப்படையாகக்...

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தலைமையகத்திற்கு பங்களாதேஷ் IIUC பல்கலைக்கழக பிரதிநிதிகள் வருகை!

பங்களாதேஷின் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (IIUC) பொருளாளர் பேராசிரியர் கலாநிதி மஹ்பூபுர்...

2026 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நாளை

2026 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை இடம்பெறவுள்ளது....