நிட்டம்புவ வித்தியானந்த பிரிவென, நிட்டம்புவ நவ வர்த்தக சங்கம், நிட்டம்புவ வித்தியானந்த பௌத்த இளைஞர் இயக்கம், திஹாரிய அமீனிய்யா ஜுமுஆ பள்ளிவாசல் திஹாரிய தன்வீர் அகடமி, நிட்டம்புவ புனித அந்தோனியார் தேவாலயம்,கஹட்டோவிட்ட வை.எம்.எம்.ஏ, மற்றும் வியாங்கொடை புனித மரியாள் தேவாலயம் ஆகிய பல்சமய அமைப்புக்களும் நிறுவனங்களும் இணைந்து பிரதேசத்தில் இன நல்லிணக்கத்தையும் நல்லுறவையும் பலப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்துள்ள இரத்ததான முகாம் இன்று காலை 9:00 மணி முதல்,
திஹாரிய கண்டி வீதி, அல் அமீனிய்யா ஜுமுஆ பள்ளிவாசலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மகத்தான நிகழ்வில் அனைவரும் கலந்து தமது பங்களிப்பை வழங்க வேண்டும் என ஏற்பாட்டுக் குழுவினர் வேண்டிக் கொள்கிறார்கள்.