மீட்டியாகொட பகுதியில் பொலிஸ் விசேட அதிரடி படையினருடன் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மீட்டியாகொட – தெல்வத்த பகுதியில் இந்த துப்பாக்கி பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நிழலுலக உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் வீடொன்றில் மறைந்திருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து, விசேட அதிரடி படையினர் குறித்த வீட்டை சுற்றி வளைத்துள்ளனர்.
இதன்போது, சந்தேகநபர் விசேட அதிரடி படையினரை நோக்கி துப்பாக்கி பிரயோகம் நடாத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதையடுத்து, விசேட அதிரடி படையினர் நடத்திய பதில் துப்பாக்கி பிரயோகத்தில் குறித்த சந்தேகநபர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த சந்தேகநபர் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து உயிரிழந்துள்ளார். 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு உயிரிழந்த நபர், அண்மையில் காலி, கராகொட பிரதேசத்தில் இனந்தெரியாத இருவரால் சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் பொலிஸ் பரிசோதகர் தெடிமுணி பாலேந்திரசிங்கவின் கொலைச் சம்பவத்தின் சந்தேக நபர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.