ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் உட்பட நான்கு சட்டமூலங்களுக்கு சபாநாயகர் சான்றுரை!

Date:

பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட நான்கு சட்டமூலங்களில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (17) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.

கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்த) சட்டமூலம், ஊழல் எதிர்ப்பு (திருத்த) சட்டமூலம், குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்த) சட்டமூலம், உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்த) சட்டமூலம் என்பவற்றையே சபாநாயகர் சான்றுரைப்படுத்தியுள்ளார்.

அதற்கமைய, 2023 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்த) சட்டம், 2023 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு (திருத்த) சட்டம், 2023 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்த) சட்டம், மற்றும் 2023 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்த) சட்டம் என்பன இன்று (17) முதல் நடைமுறைக்கு வருகின்றன.

Popular

More like this
Related

மாஸ்கோவில் புடினுடன் சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி சந்திப்பு!

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில், அதிபர் ஜனாதிபதி புதினை, சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி...

இஷாரா செவ்வந்தி உள்ளிட்டோரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க முடிவு

இஷாரா செவ்வந்தி உட்பட நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட ஆறு பேரிடம் மேலும்...

பேருந்துகளில் பயணச் சீட்டு வழங்காவிட்டால் அறிவியுங்கள்: போக்குவரத்து அதிகார சபை

பயணச் சீட்டுக்களை பயணிகளுக்கு வழங்குவது தொடர்பில் நேற்றைய தினத்தில் 217 பேருந்துகள்...

உலக உணவு தினம்: உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் விவசாயத்தை ஊக்குவித்து வரும் சவூதி அரேபியா

எழுத்து : காலித் ஹமூத் அல்கஹ்தானி, இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் ஆண்டுதோரும்...