யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள காசா மக்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் உள்ளிட்ட 35 டன் நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவிகளை ஏற்றிக்கொண்டு சவுதியின் இரண்டாவது நிவாரண விமானம் வெள்ளிக்கிழமை எகிப்தில் உள்ள எல்-அரிஷ் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
காசாவில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு உதவும் நோக்கில் சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர் மற்றும் பிரதம மந்திரி முகமது பின் சல்மான் ஆகியோரின் உத்தரவுகளின் கீழ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.