இலங்கையில் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய, சபரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும், ஏனைய பகுதிகளில் 50 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாக கூடிய சாத்தியம் நிலவுகின்றது எனவும் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழைப் பெய்யும் சந்தர்ப்பங்களில் குறித்த பகுதிகளில் காற்று அதிகரித்த வேகத்தில் வீசக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் எதிர்வு கூறியுள்ளது.
