தரம் 5 புலமைப்பரிசில் விடைத்தாள் மீள்பரிசீலனை விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

Date:

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான விடைத்தாள் மீள்பரிசீலனை விண்ணப்பங்களை எதிர்வரும் 27ஆம் திகதி முதல் டிசம்பர் 4ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

நிகழ்நிலை முறையில், குறித்த விண்ணப்பங்களை அதிபர் ஊடாக அனுப்பி வைக்குமாறும் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் மற்றும் வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன

2023 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

www.doenets.lk எனும் இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் மூலம் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டு சிறிது நேரத்தில் அனைத்து மாவட்டங்களுக்குமான தமிழ் மற்றும் சிங்களம் மொழிகளுக்கான வெட்டுப்புள்ளிகளும் வெளியிடப்பட்டன.

இதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல், கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கான தமிழ் மொழி மூலமான குறைந்தபட்ச வெட்டுப்புள்ளி 147 ஆக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த மாவட்டங்களுக்கான சிங்கள மொழிமூல அதிகூடிய வெட்டுப் புள்ளியாக 154 பதிவுசெய்யப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

NPP அரசுக்கு சவாலாக மிலிந்த மொரகொட முயற்சியில் புதிய எதிர்க்கட்சிக் கூட்டணி. ஹக்கீம், ரிஷாதும் இணைவு

தேசிய மக்கள் கட்சி அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் வகையில் ஒரு பரந்த...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பொலிஸ்மா அதிபர்...

சுகாதார அமைச்சில் விடுமுறை வழங்குவது இடைநிறுத்தம்

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு அதன் பணியாளர்களுக்கான விடுமுறை அனுமதிகளை...