தேசபந்து தென்னகோன் நியமனம்:ஈஸ்டர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களை அவமதிக்கும் செயல்:பேராயர் விசனம்

Date:

பதில் பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டமை ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களை அவமதிக்கும் செயல் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றம் சாட்டியுள்ளார்.

பதில் பொலிஸ்மா அதிபராக தேசபந்து நியமிக்கப்பட்டமை தொடர்பில் பேராயர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் மீதான குற்றச்சாட்டுகள் எவற்றையும் கருத்திற்கொள்ளாமல் அவருக்கு நியமனம் வழங்கியமையின் ஊடாக மக்களின் பாதுகாப்பின் மீது ஜனாதிபதிக்கு அக்கறை இல்லை என்பதே புலப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பதை தடுக்க வாய்ப்புக்கள் காணப்பட்ட போதும் அதனை உதாசீனம் செய்ததாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் குற்றச்சட்டை போட்டவரே தேசபந்து தென்னகோன் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான பின்னணியில் தேசபந்து தென்னகோன் போன்றோர் நாட்டின் பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டமை மிலேச்சத்தனமான செயற்பாடு என்றும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...