தேசிய மட்ட தமிழ் மொழி தின போட்டியில் பனாவிடிய முஸ்லிம் வித்தியாலய மாணவிக்கு 2ஆம் இடம்!

Date:

அகில இலங்கை தமிழ் மொழித்தின தேசிய மட்ட போட்டியில் கிரியுல்ல கல்வி வலயம் பனாவிடிய முஸ்லிம் வித்தியாலய  மாணவி என். மர்யம் (இரண்டாம் பிரிவு) பேச்சுப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

பாடசாலையின் வரலாற்றில் முதன் முறையாக தேசிய மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட இம்மாணவி எஸ். நௌபர் மற்றும் என். நஸ்ரினா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியாவார்.

மாணவிக்கு பயிற்சி வழங்கிய ஆசிரியை எம்.என்.எப். நிஸ்லா, பாடசாலை அதிபர் எம்.வை.எம். முஸம்மில் ஆகியோரும் வெற்றி பெற்ற மாணவியோடு காணப்படுகின்றனர்.

-எம்.யூ.எம்.சனூன்

Popular

More like this
Related

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...