பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தகுதியற்றவர்களை நீக்க முடியும்: பாராளுமன்ற தரநிலை சட்டமூலம் விரைவில்

Date:

உத்தேச பாராளுமன்ற தரநிலை சட்டமூலம் நடைமுறைக்கு வந்தப் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தகுதியற்றவர்களை நீக்க முடியும் என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நீதி அமைச்சில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பாராளுமன்ற தரநிலை சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். இந்த சட்டமூலம் தொடர்பான விளக்கத்தை பிரதமர் தினேஸ் குணவர்தன கட்சித் தலைவர்களுக்கு வழங்க உள்ளார். அதற்காக விசேட கட்சித் தலைவர் கூட்டமொன்றும் நடத்தப்படும்.

கட்சித் தலைவர்களுடன் பிரதமர் நடத்தும் கலந்துரையாடலின் பின் சட்டமூலத்தில் தேவையான திருத்தங்கள் செய்யப்படும்.

எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரையும் சபையில் இருந்து வெளியேற்றுவதற்கு முடியாத வகையில் சோல்பரி யாப்பில் உருவாக்கப்பட்ட விதிகள்தான் இன்னமும் பின்பற்றப்படுகின்றன.

இந்தச் சட்டமூலத்தில் மாற்றங்களை மேற்கொள்வதற்கான பரிந்துரைகளை நீதிமன்றங்களும் வழங்கியுள்ளன.“ என்றார்.

Popular

More like this
Related

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்வதற்காக, முடிந்தவரை...

நெதன்யாகு எங்கே? இஸ்ரேல் பிரதமர் குறித்து பரவும் மர்மம்: ஈரான் ஊடகம் எழுப்பும் அடுக்கடுக்கான கேள்விகள்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உயிரிழந்திருக்கலாம் அல்லது படுகாயமடைந்திருக்கலாம் என்ற யூகங்கள்...

பல்துறை அறிஞர் பேராசிரியர் நகீப் அத்தாஸ் மறைந்தார்.!

பொதுவாக அறிவுலகத்திற்கும், உலக முஸ்லிம் சமூகத்திற்கும் பெரும் அறிவுப் பங்களிப்பை வழங்கிய...

வாகன இலக்கத் தகடு : புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து

மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியைப் புதிய நிறுவனமொன்றிடம் ஒப்படைப்பதற்கான...