கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்திற்கு முன்பாக கூச்சலிட்டு கலவரத்தில் ஈடுபட்ட நபர் ஒருவரை குருந்துவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்திற்கு முன்பாக வந்த இவர், ஒருவார காலத்துக்குள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தேடி கண்டுப்பிடிக்க முடியாத வகையில் கொலை செய்து விடுவேன் என கூச்சலிட்டுள்ளதாக குருந்துவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் கூச்சலிட்டதைக் கண்டு அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் குருந்துவத்தை பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்தே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
கிரிதிவெல பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.