‘ஸாஹிம்’ தளத்தினூடாக காஸா மக்களுக்கான உதவி தொடர்கிறது!

Date:

சவூதி மன்னர் ஸல்மான் பின் அப்துல் அஸீஸ், மற்றும் பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மான் ஆகிய இருவரின் பணிப்பின் பேரில், மன்னர் ஸல்மான் மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரண மையத்தின் “ஸாஹிம்” தளத்தினூடாக காஸாவிலுள்ள  பலஸ்தீன மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நன்கொடைகள் சேகரிக்கும் படலம் கடந்த  2ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த திட்டத்திற்கு சவூதி  மன்னர், 30 மில்லியன் ரியால்களும் பட்டத்து இளவரசர், 20 மில்லியன் ரியால்களும் வழங்கி  ஆரம்பித்து வைத்தனர்.

இந்த திட்டத்தில் கடந்த 8ஆம் திகதி வரை 597,633 பேர் பங்கேற்று, (420,469,922) ரியால்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

நிவாரணத்துக்கான மன்னர் ஸல்மான் மையத்திலிருந்து ஒரு சிறப்புக் குழு,  எகிப்தின் தலைநகரான கெய்ரோவுக்குச் சென்று, எகிப்திலுள்ள சவூதி  அரேபியத் தூதுவர் உஸாமா அஹ்மத் நக்லியை சந்தித்தது.

இதன்போது  மனிதாபிமானத் தேவைகளை முன்னுரிமைப்படுத்தி, காஸாவில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான கூடாரங்கள், உணவுக் கூடைகள் மற்றும் மருத்துவப் பொருட்களை, ரபஃஹ் எல்லைக் கடவையூடாக விரைவாகக் கொண்டு செல்வதற்கான வழிமுறைகள் மற்றும் செயல்முறைகள் பற்றியும் விவாதித்தனர்.

(கலாநிதி M.H.M அஸ்ஹர்)

Popular

More like this
Related

கட்டுரை: ஸகாத் எனும் பொருளாதாரப் பொறிமுறை இலங்கையில் வறுமையைப் போக்கத் தவறியது ஏன்? – NMM மிப்லி

என்.எம்.எம்.மிப்லி ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளர் நாயகம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் mifly@mifatax.lk ஸகாத் என்பது வெறுமனே ஒரு...

இன்று உலக மது ஒழிப்பு தினம்!

மது அருந்துவதால் உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 3 மில்லியன் மக்கள்...

பாடசாலை பிளாஸ்டிக் பொருட்களுக்கு SLS சான்றிதழ் கட்டாயம்

2026 ஏப்ரல் 1 முதல் பாடசாலை மாணவர்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்தும்...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான அறிவிப்பு

2025 (2026) க.பொ.த சாதாரண தரப் (O/L) பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான ஒன்லைன்...