ஸ்டோபெரி ஏற்றுமதிக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Date:

ஏற்றுமதிக்காக நாட்டில் ஸ்டோபெரி பயிர்ச்செய்கையை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

ஏற்றுமதிக்காக ஸ்டோபெரிகளை பயிரிடுவதற்கு உள்நாட்டு முதலீட்டாளர்களால் முன்னதாக கோரப்பட்டிருந்தது.

இதற்கமைய முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை இந்த அனுமதியை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த திட்டத்திற்கு முதற்கட்ட நடவடிக்கையாக நுவரெலியாவில் விவசாய அமைச்சுக்கு சொந்தமான ஒரு ஹெக்டயர் காணியை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த திட்டம் வெற்றியடைந்தால் ஸ்டோபெரி பயிர்ச்செய்கைக்காக 10 ஹெக்டயர் வரையான காணியை வழங்க முடியும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஸ்டோபெரி ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 57 ஆவது இடத்தில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஸ்டோபெரிகளை பயிரிட்டால் ஒரு ஹெக்டயர் காணியில் இருந்து வருடத்துக்கு ஒரு இலட்சத்து 17 ஆயிரத்து 600 அமெரிக்க டொலரை வருமானமாக ஈட்ட முடியும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...