அடுத்த ஆண்டுக்குள் கல்வி முறை டிஜிட்டல் மயமாக்கப்படும்: கல்வி அமைச்சர்

Date:

அடுத்த வருடத்திற்குள் முழு கல்வி முறையும் டிஜிட்டல் மயமாக்கப்படும், அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது எடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

டி.எஸ்.சேனநாயக்க கல்லூரியில் 4,672 புதிய நியமனங்களை வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்ட அமைச்சர், சகல நிதி வசதிகளும் தற்போது பெறப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறைக்கான தொடர்புடைய சாத்தியக்கூறு ஆய்வுகள் டிசம்பர் இறுதிக்குள் முடிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

கல்வி சீர்திருத்தங்களுடன், திட்டத்தின் முதல் கட்டமாக அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் அனைத்து 1A, 1B மற்றும் 1C  பாடசாலைகளிலும் டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறை செயல்படுத்தப்படும்.

அனைத்து அதிபர்களும் ஆசிரியர்களும் டிஜிட்டல் மயமாக்கல் முறையை பின்பற்ற வேண்டும். கல்வி சீர்திருத்த வேலைத்திட்டம் எத்தகைய சிரமங்களை எதிர்கொண்டாலும் தொடர வேண்டும் என அமைச்சர் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...