அரசியலமைப்பு பேரவை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் விளக்கமளிக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம் எழுதவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
பேரவைத் தலைவர் என்ற முறையில் தாம் அதைச் செய்வதாகவும் சபாநாயகர் கூறியுள்ளார்.
அரசியலமைப்பு பேரவை தொடர்பில் ஜனாதிபதி சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு பேரவையின் தாமதங்கள் குறித்து ஆராய ஒரு தெரிவுக்குழுவை நியமிக்குமாறு ஜனாதிபதி நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் அழைப்பு விடுத்திருந்தார்.
“நான் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை எழுதி, அவரது கருத்து குறித்து அரசியலமைப்பு பேரவையின் நிலைப்பாட்டை விளக்குவேன்.” என்றும் சபாநாயகர் வலியுறுத்தினார்.
அத்துடன், பொலிஸ்மா அதிபர் மற்றும் இலஞ்ச – ஊழல் ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்களின் அங்கீகாரம் தொடர்பான விடயங்கள் இரண்டு வாரங்களுக்குள் மேற்கொள்ளப்படும் எனவும் சபாநாயகர் உறுதியளித்தார்.