இரண்டாவது கட்டமாக 17 பணயக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ்

Date:

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நீண்ட நாட்களாக போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் அமைப்பினர் வெளிநாட்டினர் உள்பட 250-க்கும் மேற்பட்டோரை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

இதற்கிடையே பணயக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது.இதில் கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்தன.

அப்போது பணயக் கைதிகளை விடுவிப்பதற்கு ஈடாக காசாவில் 4 நாட்களுக்கு போர் நிறுத்துவதாக இஸ்ரேல் அறிவித்தது.

இந்த 4 நாள் போர் நிறுத்தத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 50 பணயக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இஸ்ரேல்-ஹமாஸ் ஒப்பந்தப்படி முதல் கட்டமாக இஸ்ரேல், தாய்லாந்தைச் சேர்ந்த 25 பணயக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து இஸ்ரேல் வசம் உள்ள 39 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இரண்டாவது கட்டமாக 17 பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவித்துள்ளது. இதில் 13 இஸ்ரேலியர்களும், 4 தாய்லாந்து நாட்டினரும் அடங்குவர். அவர்கள் காசா எல்லை வழியாக எகிப்தை அடைந்தனர்.

தற்காலிக அமைதி ஒப்பந்தத்தை தொடர்ந்து பிணைக்கைதிக தற்காலிக அமைதி ஒப்பந்தத்தை தொடர்ந்து பணயக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...

சதாம் உசேன் முதல் அலி கமேனி வரை: அமெரிக்காவின் இரட்டை வேடமும் சர்வதேச நீதியும்.

'அல்லாஹ்வின் பாதையில் இறந்தவர்களை 'மரணித்தவர்கள்' என்று கூறாதீர்கள். ஏனெனில் அவர்கள் உயிருடனேயே...