கடந்த ஓக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் தெற்கு இஸ்ரேலைத் தாக்கிய பின்னர் தொடங்கிய போருக்கு ஒரு மாதத்திற்கும் மேலாக வளர்ந்துள்ளது.
பலஸ்தீன சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, குறைந்தது 11,500 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் அவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் மற்றும் சிறார்களாக உள்ளனர். மேலும் 2,700 பேரைக் காணவில்லை, இடிபாடுகளுக்கு அடியில் புதையுண்டதாக நம்பப்படுகிறது.
உலகெங்கிலும் உள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் காசாவில் பலஸ்தீனியர்களுடன் ஒற்றுமையுடன் பேரணி நடத்தினர், இஸ்ரேலிய தாக்குதல்களில் பொதுமக்கள் அதிக அளவில் உயிரிழப்பதைக் கண்டித்து உடனடியாக போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
அதற்கமைய பலஸ்தீனத்திலும்,காசாவிலும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகளினால் நடாத்தப்படும் கொடூர இனப் படுகொலைகளுக்கு எதிராக இன்று (17) புத்தளம் நகரில் கண்டன ஆர்பாட்டம் ஒன்று இடம் பெற்றது.
அதனைத் தொடர்ந்து புத்தளம் வாழ் பொது மக்களினால் கண்டன அறிக்கையொன்றும் வாசிக்கப்பட்டது.