ஈஸ்டர் தாக்குதலில் உள்ளூர் அரசியல் சக்திகள் ஈடுபட்டுள்ளதாக நம்பும் இலங்கையர்கள்: ஆய்வில் தகவல்

Date:

இலங்கையில் 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் உள்ளூர் அரசியல் சக்திகள் சம்பந்தப்பட்டிருந்ததாக இலங்கை சனத்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் நம்புவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

Syndicated Surveys ஆல் கடந்த ஒக்டோபர் மாதம் முன்னெடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வில் 53 வீதமானவர்கள் தாக்குதகளின் பின்னணியில் உள்ளூர் அரசியல் சக்திகள் சம்பந்தப்பட்டிருந்ததாக கூறியுள்ளனர்.

வெரிடே ரிசர்ச்சின் கூற்றுப்படி, கணக்கெடுக்கப்பட்டவர்களுக்கு, தாக்குதல்களுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து நாட்டில் நிலவும் பின்வரும் மூன்று தெரிவுகள் வழங்கப்பட்டன.

1) ஆபத்தான வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து செயற்படும் இலங்கை தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்டது.

2) உள்ளூர் அரசியல் சக்திகளுடன் இணைந்து செயற்படும் இலங்கை தீவிரவாதிகளால் இது மேற்கொள்ளப்பட்டது.

3) உள்ளூர் அரசியல் சக்திகளுடனும் ஆபத்தான வெளிநாட்டு சக்திகளுடனும் இணைந்து செயற்பட்ட இலங்கை தீவிரவாதிகளால் இது மேற்கொள்ளப்பட்டது.

இதிலிருந்து மிகவும் ஒப்புக்கொண்ட ஒன்றைத் தெரிவுசெய்யும்படி ஆய்வில் பங்கெடுத்தவர்களிடம் கேட்டுக் கொண்டனர்.

இந்த ஆய்வின் முடிவில் 53 வீதமானவர்கள் உள்ளூர் அரசியல் சக்திகள் சம்பந்தப்பட்டிருப்பதாக நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

30 வீதம் பேர் இரண்டாவது பதிலையும், 23 வீதம் பேர் மூன்றாவது பதிலையும் தேர்ந்தெடுத்தனர். உள்ளூர் அரசியல் சக்திகளின் தலையீடு இல்லாமல் இது மேற்கொள்ளப்பட்டதாக எட்டு வீதம் மட்டுமே நம்பினர்.

39 வீதமானவர்கள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகின்றது. 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் மூன்று தேவாலயங்கள் மற்றும் மூன்று சொகுசு ஹோட்டல்களை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் மொத்தம் 269 பேர் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து 2023 ஒக்டோபரில் ஆய்வு நடத்தப்பட்டதுடன், நாடு முழுவதும் உள்ள 1,029 பேரிடம், தேசிய பிரதிநிதித்துவ மாதிரி பதில்களின் அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டது.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...