உயர் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள மாட்டேன்: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

Date:

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தவறாக கையாண்டமைக்கு தானும் அரசாங்கத்தில் உள்ள பலருமே பொறுப்பு என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.

நிதி முறைகேடுகள் மற்றும் பொருளாதாரத்தின் முறைகேடுகளுக்கு காரணமானவர்களுக்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்களில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறீர்களா என்ற ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், தீர்ப்பை ஏற்கப் போவதில்லை என்றும், அதற்கான காரணங்களை  தாம் வாய்ப்பு கிடைக்கும் போது விளக்கமளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்சி மாநாடு பிரமாண்டமாக நடத்தப்படும் என்றும், அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி தேர்தல் மட்டத்தில் ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...