ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இடையே விசேட கலந்துரையாடல் இன்று!

Date:

எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் குழுவிற்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று (27) இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் வேலைத்திட்டம் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் புதிய அதிகாரிகள் சபையுடன் அமுல்படுத்தப்படவுள்ளது.

தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு இந்த புதிய நிர்வாக சபையும் தீர்க்கமான காரணியாக இருப்பதன் காரணமாக அடுத்த வருடம் நடைபெறவுள்ள தேர்தலுக்கான பாரிய பொறுப்பு இந்த அதிகாரி சபைக்கும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, இன்றைய கலந்துரையாடல் முக்கியமான கலந்துரையாடலாக அமையும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...