ஐ.பி.எல் போல புதிதாக அறிமுகமாகும் ஐ.எஸ்.பி.எல் கிரிக்கெட் தொடர்!

Date:

ஐ.பி.எல் போன்று இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் (ஐ.எஸ்.பி.எல்) என்ற புதிய கிரிக்கெட் தொடர் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் (ஐ.எஸ்.பி.எல்) டி10 வடிவில் நடத்தப்பட உள்ளது. இந்தத் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் 2 ஆம் திகதி தொடங்கி 9 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் மொத்தம் 19 போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இந்த டென்னிஸ் பந்து கிரிக்கெட் தொடரின் அனைத்துப் போட்டிகளும் கிரிக்கெட் மைதானத்தில் நடத்தப்படவுள்ளது. இத்தொடரில் மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகரைச் சேர்ந்த 6 அணிகள் பங்கேற்கவுள்ளன.

இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் (ஐ.எஸ்.பி.எல்) போட்டியில் பங்குபெறும் அணி ஒன்றில் 16 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஒரு அணிக்கு உதவிப் பணியாளர்கள் 6 பேர் இருக்கலாம். ஒவ்வொரு அணிக்கும் ஒரு கோடி ரூபாய் (இந்திய ரூபா )ஏலத் தொகையாக வழங்கப்படும். வீரர்களுக்கான ஏலம் அடுத்த ஆண்டு பெப்ரவரி 24 ஆம் திகதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீரர் ஒருவருக்கான குறைந்தபட்ச ஏலத்தொகை ரூ.3 லட்சமாக ( இந்திய ரூபா )நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வரம்பு என்பது கிடையாது.

இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் (ஐ.எஸ்.பி.எல்) தொடரின் குழுத் தலைவராக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேசப் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களைப் போன்று விளையாட வேண்டும் என்ற கனவோடு உள்ள பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்காக இந்தப் புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...