ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் கோப் குழுவின் தலைவரான ரஞ்சித் பண்டாரவின் மகன் கனிஷ்க பண்டார அதில் பங்கேற்றிருந்தமை தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேதமதாஸ பாராளுமன்றில் இன்று கேள்வி எழுப்பியிருந்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தொடர்ந்தும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டாரவின் தலைமையின் கீழ் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தொடர்பான விசாரணைகளை நடத்துவதற்கு கோப் குழுவின் உறுப்பினர்கள் தயாரில்லை என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இதன்போது தெரிவித்தார்.
இதன் காரணமாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டாரவை கோப் குழுவின் தலைவர் பதவியில் இருந்து நீக்கி, விசாரணை நடத்தப்பட வேண்டும் என எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.