சபாநாயகரின் அறிவித்தல்கள்!

Date:

“பாராளுமன்றத் தேர்தல்கள் (திருத்தம்)” சட்டமூலத்தின் பரிசீலனைக்கென நிலையியற் கட்டளையின் 113(2) இன் பிரகாரம் சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களை தான் மேலதிக உறுப்பினர்களாக நியமித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (18) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

அதற்கமைய, பிரசன்ன ரணதுங்க, சட்டத்தரணி பவித்ராதேவி வன்னிஆரச்சி, கஞ்சன விஜேசேகர, கௌரவ அநுராத ஜயரத்ன, சட்டத்தரணி சந்திம வீரக்கொடி, சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ, மயந்த திசாநாயக்க மற்றும் ரோஹினீ குமாரி விஜேரத்ன ஆகியோர் அந்தக் குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

“மாகாண சபைத் தேர்தல்கள் (திருத்தம்)” சட்டமூலத்தைப் பரிசீலிப்பதற்கு நியமிக்கப்பட்ட மேலதிக உறுப்பினர்கள்

“மாகாண சபைத் தேர்தல்கள் (திருத்தம்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென நிலையியற் கட்டளையின் 113 (2) இன் பிரகாரம் சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களை மேலதிக உறுப்பினர்களாக நியமித்துள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.

அதற்கமைய, சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த, ஜானக வக்கும்புர, இம்தியாஸ் பாகிர் மாகார், ஆர்.எம். ரஞ்சித் மத்தும பண்டார, இரான் விக்கிரமரத்ன, இசுரு தொடங்கொட, எம்.டப்ளியூ.டீ. சஹன் பிரதீப் விதான மற்றும் டீ. வீரசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

ஈரானியக் கப்பல் விவகாரம்: மனிதாபிமான அடிப்படையில் இலங்கை தன்னிச்சையான முடிவை எடுத்துள்ளது: ஜனாதிபதி

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள 'IRIS Bushehr' என்ற ஈரானியக் கப்பலில்...

கொழும்பு துறைமுகத்தை பாதுகாப்பாக வந்தடைந்த ‘ஐரிஸ் புஷேர்’ கப்பலில் இருந்த 204 பணியாளர்கள்!

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலில் உள்ள...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை

இன்றையதினம் (06) நாட்டின் தென் மாகாணத்திலும், இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களிலும் சில...

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...