பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக்க ரத்நாயக்கவிற்கு மரண அச்சுறுத்தல் விடுத்து, கப்பம் பெற முயற்சித்ததாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
சந்தேகநபர் கைது செய்யப்படும் சந்தர்ப்பத்தில் சந்தேகநபர் வசமிருந்து 12 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.