லங்கா சீனி தனியார் நிறுவனத்தின் வருடாந்த கணக்காய்வு அறிக்கை வெளியீடு!

Date:

லங்கா சீனி தனியார் நிறுவனம் தொடர்பில் தேசிய கணக்காய்வு அலுவலகம் வருடாந்த கணக்காய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் 2022 ஆம் ஆண்டிற்கு மாத்திரம் லங்கா சீனி தனியார் நிறுவனத்தினால் ஊக்கத்தொகை மற்றும் கொடுப்பனவாக மாத்திரம் 73 கோடி ரூபாவிற்கும் அதிகமாக செலுத்திப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2022ஆம் ஆண்டு செவனகல மற்றும் பெலவத்த சீனி நிறுவனங்களுக்கு கொடுப்பனவு மற்றும் ஊக்கத்தொகையாக 73 கோடியே 67 இலட்சத்து இருபத்தாயிரத்து நூற்றி இருபத்தைந்து ரூபா வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

செவனகல பிரிவு மற்றும் தலைமை அலுவலகத்திற்கான கொடுப்பனவு மற்றும் ஊக்கத்தொகையாக கடந்த வருடம் இருபத்தி இரண்டு கோடியே எண்பத்தேழு இலட்சத்து மூவாயிரத்து நூற்றி இருபத்தைந்து ரூபாய் செலுத்தப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் குறிப்பிடுகிறது.

அரச வர்த்தக சுற்றறிக்கையின் பிரகாரம் கடந்த வருடத்திற்கான கொடுப்பனவு தொகை இரண்டு கோடியே எண்பத்தி ஆறு லட்சம் ரூபாவாக காணப்பட்ட போதிலும், இருபது கோடியே ஒரு இலட்சத்து மூவாயிரத்து நூற்றி இருபத்தைந்து ரூபாவிற்கும் அதிகளவான செலுத்தப்பட்டுள்ளமை கணக்காய்வில் தெரியவந்துள்ளது.

அரச வர்த்தக சுற்றறிக்கையின் பிரகாரம் பெலவத்தை துறைக்கு செலுத்தக்கூடிய ஊக்கத்தொகை எட்டு கோடி என்ற போதிலும் 50 கோடியே 80 இலட்சத்து 17 ஆயிரம் ரூபா பணம் செலுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதன்படி 40 கோடியே 95 இலட்சத்து 57 ஆயிரம் ரூபாய் அதிகளவாக செலுத்தப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...