தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை

Date:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை (13) மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம், அந்த நாளுக்குரிய கல்வி நடவடிக்கையை ஈடுசெய்ய எதிர்வரும் சனிக்கிழமை (18) மத்திய மாகாணத்தில் தமிழ் பாடசாலைகளை நடத்துவதற்கும் ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் இது தொடர்பான கோரிக்கையை மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யு.கமகேவிடம் விடுத்திருந்தார்.

அந்த கோரிக்கையை ஏற்று திங்கட்கிழமை விடுமுறை வழங்குவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

தமது கோரிக்கையை ஏற்று, தமிழர்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான தீபாவளிக்கு விசேட விடுமுறை வழங்க நடவடிக்கை எடுத்த ஆளுநருக்கு பாராளுமன்ற உறுப்பினர் நன்றி தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

விசேட போக்குவரத்து நடவடிக்கை தொடர்பான அறிவிப்பு!

பொரலஸ்கமுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெல்லன்வில ராஜமஹா விகாரையில் நடைபெறும் எசல மகா...

36 ஆண்டுகள் ஆகியும் 121 உயிர்களை மிலேச்சத்தனமாக படுகொலை செய்த LTTE இன் இரத்த வெறியின் ஆறாத வடுக்கள்.

கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சுவடுகளில் ஆறாத வடுவாகப் பதிந்துவிட்ட ஏறாவூர் படுகொலை இடம்பெற்று...

பன்முகத்தன்மை மற்றும் சமூக அமைதி குறித்த சர்வதேச மாநாடு நைஜீரியாவில்..!(படங்கள்)

நைஜீரியத் தலைநகர் அபூஜாவில், சமூக அமைதி' குறித்த உலக முஸ்லிம் (ராபீதா)...

கொலம்பிய மக்களுக்கு இலங்கை இரங்கல்!

உயிரிழப்புகளையும் பரவலான அழிவையும் ஏற்படுத்திய கடுமையான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, கொலம்பியா மக்களுக்கு...