தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையில் இன்று வெள்ளிக்கிழமை புத்தளம் நகர மண்டபத்தில் இரத்ததான முகாம் நடைபெற்றது.புத்தளம் சர்வமத அமைப்பு, ரம்ய லங்கா , புத்தளம் மாநகர சபை, மற்றும் புத்தளம் பெண்கள் தலைமைத்துவ நிகழ்ச்சித்திட்டம் என்பன இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன.
நாட்டின் ஒற்றுமைக்காக ஒரு துளி இரத்ததானம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் சகல மதங்களையும் சேர்ந்த கொடையாளார்கள் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கினார்கள்.
புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பின் பிரதான மதத்தலைவர்கள் கலந்துகொண்டு இந் நிகழ்வின் வெற்றிக்காக தமது ஆசிகளை வழங்கினர்.