நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்மானம்!

Date:

சவாலுக்குட்படுத்தப்பட்ட நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் தனிப் பெரும்பானமையுடன் நிறைவேற்றுவதற்கு, அதிலுள்ள பல சரத்துகள் திருத்தப்பட வேண்டுமென உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்ற தீர்ப்பு இன்று பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷவினால் அறிவிக்கப்பட்டது.

இதன்படி, அரசியலமைப்புச் சட்டத்தின் 84(2) பிரிவுகமைய, ஷரத்துகள் 3, 5, 7, 9, 11,12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 36, 37, 42, 45, 53, மற்றும் 56 ஆகியவற்றில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குழு நிலையின் போது இந்த ஷரத்துகள் திருத்தப்படுமாயின் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் எளிய பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, குறித்த சட்டமூலம் அல்லது அதன் விதிகள் அரசியலமைப்புக்கு முரணாக இல்லை எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் கடந்த ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

சட்டமூலமானது நாட்டின் சில அறிக்கைகளில் தகவல் தொடர்புகளைத் தடைசெய்வதனை நோக்கமாகக் கொண்டுள்ளது விமர்சனம் முன்வைக்கப்பட்டதுடன், சட்டமூலத்திற்கு எதிராக மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் இதுவரை 46 மனுக்கள் தாக்கல் செய்யப்படுள்ளன.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...