மின்கட்டணம் மற்றும் எரிபொருள் அதிகரிப்பு காரணமாக பாடசாலை உபகரணங்களின் விலையை 10 வீதத்தால் அதிகரிப்பதில் உற்பத்தி நிறுவனங்கள் கவனம் செலுத்தியுள்ளன.
நாடளாவிய ரீதியில் தமது உற்பத்திப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் குறித்த உற்பத்தி நிறுவனங்கள் மின் கட்டணம் மற்றும் எரிபொருள் கட்டணங்களின் விலையேற்றத்தால் பெரும் பாதிப்பை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றன.
இதேவேளை எரிபொருட்களின் விலை அதிகரிப்பு பாரியளவில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் நட்டத்தை எதிர்கொண்டுள்ளதால் விலையை அதிகரிக்காமல் நிறுவனங்களை நடத்த முடியாதுள்ளதாகவும் உற்பத்தி நிறுவனத்தினர் தெரிவிக்கின்றனர்.