மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இன்று காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றையதினம் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பியிருந்தார்.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக 48 மணித்தியாலங்களுக்குள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்க வேண்டும் என நீதிமன்றத்தால் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அண்மையில் இலங்கையில் மதச்சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டமையானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.