ரணில் அரசாங்கத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை: கருத்து கணிப்பில் தகவல்

Date:

இலங்கை அரசாங்கம் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் மீது இலங்கையில் 10 வீதத்திற்கும் குறைவானவர்களே நம்பிக்கை வைத்துள்ளதாக கொழும்பை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் வெரிட்டே ரிசர்ச் (Verité Research) அமைப்பு நேற்று (6) வெளியிடப்பட்ட ஆய்வு முடிவில் தெரிவித்துள்ளது.

தேசத்தின் மனநிலை (Mood of the Nation) என்ற தொனிப்பொருளில் நடத்தப்பட்ட மக்கள் கருத்துக் கணிப்பில் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் அங்கீகாரம் ஜூன் மாதத்தில் 21 வீதமாக இருந்து நவம்பரில் 9 வீதமாக குறைவடைந்துள்ளது. நான்கு மாதங்களில் இது அரைவாசிக்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த நான்கு மாதங்களில் அரசாங்கம் மீது மக்கள் கொண்டுள்ள திருப்தியானது 12 வீதத்தில் இருந்து 6 வீதமாக குறைந்துள்ளது. அதேபோல் பொருளாதார நம்பிக்கைக்கான சுட்டெண்ணும் 62 வீதத்திலிருந்து 44 வீதமாக சரிந்துள்ளது.

இந்த கருத்துக்கணிப்பில் அனைத்து அம்சங்களிலும் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையில் பாரிய வீழ்ச்சியும், பின்னடைவும் ஏற்பட்டுள்ளது என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த ‘தேசத்தின் மனநிலை’ கருத்துக்கணிப்பு ஆண்டிற்கு மூன்று முறை நடத்தப்படுகிறது. இந்தக் கருத்துக்கணிப்பில் பிழை வரம்பு அதிகபட்சமாக 3 வீதத்திற்கும் குறைவாக இருக்குமாறு வரையறுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

இம்முறை இந்த ஆய்விற்காக நாடு முழுவதிலும் 1,029 பேரிடமிருந்து கருத்துகள் கேட்கப்பட்டன. இந்த கருத்தறியும் பணி கடந்த ஒக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் இடம்பெற்றது.

ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் தொடர்ந்து பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பதோடு தொழிற்சங்கங்கள் உட்பட சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் அதிகரித்த வரி காரணமாக மிகுந்த சிரமங்களை எதிர்கொள்வதாக தொழிற்சங்கங்கள் உட்பட பல தரப்பினர் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...