ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 75வது ஊடக செயலமர்வு கொழும்புபாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில்..!

Date:

 ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பாடசாலைகளுக்கான ஊடக செயலமர்வின் 75வது ஊடகச் செயலமர்வு கடந்த சனிக்கிழமை ( 25) கொழும்பு 12 , பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லுாரியில் முழு நாள் கருத்தரங்காக நடைபெற்றது.

’21ஆம் நுாற்றாண்டில் இலத்திரனியல் மற்றும் சமூக ஊடகங்கள்’ எனும் தலைப்பில் . ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம் அமீன், மற்றும் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லுாரியின் அதிபர் எம்.எச். மும்தாஜ் பேகம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இச் செயலமர்வில் பிரபல ஊடக நிறுவனங்களின் முகாமையாளர்கள், சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் என துறை சார்ந்த விரிவுரையாளர்கள் பல தலைப்புகளில் விரிவுரைகளையும் , பயிற்சிகளையும் வழங்கினார்கள்.

சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜீவா சதாசிவம், பத்திரிகை செய்தி அறிக்கையிடல் தொடர்பாகவும் , சிரேஷ்ட ஒலிபரப்பாளர் ஏ. ஆர்.வி லோசன் , வானொலியில் செய்தி அறிக்கையிடுதல் மற்றும் செய்தி வாசிப்பு பற்றியும், சத்தி தொலைக்காட்சியின் செய்தி முகாமையாளர் ஜிப்ரி ஜெபதர்சன் தொலைக்காட்சி செய்தியறிக்கையிடுதல் மற்றும் குரல் பயிற்சிகள் போன்றவற்றையும், ஸ்ரீலங்கா முஸ்லீம் மீடியா போரத்தின் செயலாளரும் , சி . ஐ . ஆர் பணிப்பாளருமான சிஹார் அனீஸ், AI ( செயற்கை நுண்ணறிவு ) தொடர்பாகவும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நிகழ்ச்சி தயரிப்பாளரும், ஊடக பயிற்று விப்பாளருமான இஸ்பாஹான் சராப்டீன், சமூக சேவை ஊடக வலைத்தளங்களில் கைத்தொலைபேசி ஊடாக செய்தி தயாரித்தல் போன்ற தலைப்புகளில் விரிவுரைகளை நிகழ்த்தினார்கள்.

சான்றிதழ் வழங்கும் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயரஸ்தானிகராலயத்தின் ஊடக மற்றும் கல்வி கலாசார நடவடிக்கைகளுக்கான இணைப்பாளராக புதிதாக நியமனம் பெற்ற அதில் சத்தார் அவர்கள் மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.

கல்லூரியின் அதிபர், பிரதி அதிபர்கள், கல்லூரி அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், முஸ்லீம் மீடியா போரத்தின் செயற்குழு உறுப்பினர்களும் மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.

ஊடக செயலமர்வினை கல்லுாரியின் அபிவிருத்தி சங்கம் ஏற்பாடு செய்திருந்ததுடன் 160 மாணவிகள் கலந்து கொண்திருந்தனர்.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...