‘2023’ வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளில் 86 வீதமானவை நிறைவேற்றப்பட்டுள்ளன!

Date:

2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளில் 86 வீதமானவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அவற்றில் சில முன்மொழிவுகள் நடுத்தர மற்றும் நீண்ட கால அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளின் எண்ணிக்கை 120 ஆகும். அதில் 29 வருவாய் முன்மொழிவுகள், 30 செலவின முன்மொழிவுகள் மற்றும் 61 கொள்கை முன்மொழிவுகளாகும். இவற்றில் 24 வருவாய் முன்மொழிவுகளும், 17 கொள்கை முன்மொழிவுகளும் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது, ​​தொடங்கப்பட்டு செயல்படுத்தப்படும் முன்மொழிவுகளின் எண்ணிக்கை 62 ஆகும். இதில் 5 வருவாய் முன்மொழிவுகள், 27 செலவின முன்மொழிவுகள் மற்றும் 30 கொள்கை முன்மொழிவுகள் உள்ளடங்குகின்றன.

இதன்படி, மொத்த வரவு – செலவு திட்ட முன்மொழிவுகளில் 86 வீதமானவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது அல்லது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, 17 வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகள் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதற்கான காரணங்கள் தொடர்பில் உரிய அமைச்சுகளில் ஆராயப்படும்.

தொழில்நுட்ப குறைபாடுகள், மனித வள குறைபாடுகளாலும் அல்லது சட்ட சிக்கல்கள் காரணமாகவும் சில முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது.“ என்றும் அவர் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (01) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த  எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி...

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்; இன்றுமுதல் இலகுவான நடைமுறை

ஒரு முன்னோடித் திட்டமாக புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி...

இலங்கையில் பார்வையின்மையை எதிர்த்துப் போராடுவதற்கான சவூதியின் ‘நூர் தன்னார்வத் திட்டம்’ எம்பிலிப்பிட்டியாவில்!

சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால சிறப்பான உறவுகளை அடிப்பையாகக் கொண்டும்...