2024 ஆம் ஆண்டுக்கான ‘பட்ஜெட்’ எதிர்வரும் திங்கட்கிழமை பாராளுமன்றத்தில்!

Date:

2024 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்) எதிர்வரும் திங்கட்கிழமை (நவம்பர் 13) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால், பாராளுமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த ஒக்டோபர் 19 ஆம் திகதி பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு கூடிய போது எதிர்வரும் 13ஆம் திகதி வரவு-செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 14ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஏழு நாட்களுக்கு நடைபெறும் என பாராளுமன்ற பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

மேலும், வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 21ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

நவம்பர் 22 முதல் டிசம்பர் 13 வரை ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்து 19 நாட்களுக்கு குழுநிலை விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, 2024ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 13ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

Popular

More like this
Related

அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது: 7.50 இலட்சம் ஊழியர்கள் பாதிப்பு!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அரசு நிர்வாகத்துக்கு நிதி ஒதுக்கும் செலவீனங்கள் தொடர்பான மசோதாவுக்கு...

சிறுவர்களின் உலகம் உண்மையான, அழுக்கற்ற உலகம்: ஜனாதிபதியின் சிறுவர், முதியோர் தின வாழ்த்துச் செய்தி

ஒரு நாட்டின் மற்றும் உலகின் எதிர்காலம் சிறுவர்களின் கைகளிலே உள்ளது. அவர்களின்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (01) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...