6 புதிய நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி!

Date:

அமைச்சின் செயலாளர் ஒருவர் உட்பட 6 புதிய நியமனங்களுக்குப் பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவின் அங்கீகாரம் கிடைத்திருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

இதற்கு அமைய பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக கே.டி.என்.ஆர். அசோக்கவின் நியமனத்துக்கு உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி கிடைத்துள்ளது.

அத்துடன், இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக திருமதி கே.டி.செனவிரத்னவை நியமிப்பதற்கும், ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக எஸ்.ஆர்.பி. போகல்லாகமவை நியமிப்பதற்கும் உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.

சிங்கப்பூருக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக டீ.டீ.எம்.எஸ்.பி. திசாநாயக்க, பெல்ஜியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கைத் தூதுவராக டபிள்யூ.கே.சி.வீரசுமன மற்றும் வரையறுக்கப்பட்ட லங்கா உர நிறுவனத்தின் தலைவராக கலாநிதி பி.கே.ஜீ.கே.பெரேரா ஆகியோரின் நியமனத்துக்கும் உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியது.

சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அண்மையில் (15) பாராளுமன்றத்தில் கூடிய உயர் பதவிகள் பற்றிய குழுக் கூட்டத்தில் அமைச்சர்களான கௌரவ நிமல் சிறிபால டி சில்வா, கெளரவ விதுர விக்கிரமநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன் செனவிரத்ன, கௌரவ அனுர பிரியதர்ஷன யாப்பா, கௌரவ ரிஷாத் பதியுதீன் மற்றும் கௌரவ உதய கம்மன்பில ஆகியோர் கலந்துகொண்டனர்

Popular

More like this
Related

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் கைது!

தேசிய லொத்தர் சபையின் (NLB) முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ இன்று...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (19) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

60 நாள் காசா போர் நிறுத்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட ஹமாஸ்..!

பணயக்கைதிகளை விடுவிப்பதற்காக 60 நாள் போர் நிறுத்த பரிந்துரை முன்மொழியப்பட்டது. இந்த...

கேம்பிரிட்ஜ் அகராதியில் GenZ, Gen Alpha தலைமுறைகள் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகள் இணைப்பு!

கேம்ப்ரிட்ஜ் அகராதி கடந்த ஒரு ஆண்டில் 6,000-க்கும் மேற்பட்ட புதிய சொற்களையும்,...