எதிர்வரும் வாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்களான அலி சப்ரி, கஞ்சன விஜயசேகர, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்டவர்கள் அடங்கிய சுமார் 80 பேர் அடங்கிய தூதுக்குழுவுடன் டுபாய் செல்லவுள்ளார்.
டுபாயில் அடுத்தவாரம் இலங்கை முன்னின்று நடத்துகின்ற சூழல் பாதுகாப்பு மாநாட்டிற்காகவே இந்த குழு அங்கு செல்கிறது.
இது தொடர்பில், ஆங்கில ஊடகமொன்று வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், , 20 பேர் கொண்ட இளைஞர் குழு ஒன்றும், 15 தொழில்நுட்ப ஆலோசகர்களும் இந்த குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த குழுவின் பெரும்பாலான உறுப்பினர்களின் டுபாய் பயணத்துக்கான கட்டணங்கள் அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கலாம் அல்லது பிற நிறுவனங்கள் அனுசரணை வழங்கி இருக்கலாம் என்றும் குறித்த ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.