இலங்கை கிரிக்கெட் தலைமை அலுவலகத்துக்கான நுழைவு வீதி தற்காலிகமாக மூடப்பட்டது

Date:

வித்யா மாவத்தையில் இருந்து இலங்கை கிரிக்கெட் தலைமையகத்திற்கான நுழைவுப் பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கு முன்பாக நடாத்த திட்டமிட்டுள்ள போராட்டத்தை தவிர்க்கும் நோக்கிலேயே இவ்வாறு பாதை மூடல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸார், இராணுவத்தினர், கலகத் தடுப்பு பிரிவு உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவினர் உள்ளிட்டோர் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனடிப்படையில், பத்தரமுல்லே சீலரத்ன தேரர், கடிதமொன்றை கையளிப்பதற்காக ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கு வருகைத் தந்துள்ளார்.

தேரரை முதலில் பொலிஸார் இடைமறித்துள்ளதுடன், பின்னர் கடிதத்தை கையளிப்பதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.

இதேவேளை, ஊழல், மோசடியுடன் தொடர்புடையதாக கூறப்படும் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் உள்ளிட்ட நிர்வாகத்தை பதவி நீக்கம் செய்யும் நோக்கத்துடன், பாராளுமன்றத்தில் இன்று விசேட விவாதமொன்று நடாத்தப்பட்டு, மாலை வாக்கெடுப்பு நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த விவாதம் பாராளுமன்றத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...