இஸ்ரேலிய ஆக்கிரமிப்பால் நடாத்தப்படும் இனப் படுகொலைகளுக்கு எதிராக புத்தளம் நகரில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம்!

Date:

கடந்த ஓக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் தெற்கு இஸ்ரேலைத் தாக்கிய பின்னர் தொடங்கிய போருக்கு ஒரு மாதத்திற்கும் மேலாக வளர்ந்துள்ளது.

பலஸ்தீன சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, குறைந்தது 11,500 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் அவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் மற்றும் சிறார்களாக உள்ளனர். மேலும் 2,700 பேரைக் காணவில்லை, இடிபாடுகளுக்கு அடியில் புதையுண்டதாக நம்பப்படுகிறது.

உலகெங்கிலும் உள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் காசாவில் பலஸ்தீனியர்களுடன் ஒற்றுமையுடன் பேரணி நடத்தினர், இஸ்ரேலிய தாக்குதல்களில் பொதுமக்கள் அதிக அளவில் உயிரிழப்பதைக் கண்டித்து உடனடியாக போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

அதற்கமைய பலஸ்தீனத்திலும்,காசாவிலும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகளினால் நடாத்தப்படும் கொடூர இனப் படுகொலைகளுக்கு எதிராக இன்று (17) புத்தளம் நகரில் கண்டன ஆர்பாட்டம் ஒன்று இடம் பெற்றது.

இவ் கண்டன ஆர்ப்பாட்ட பேரணிக்கு பெருந்திரளான புத்தளம் நகர மக்கள் கலந்து கொண்டதோடு இஸ்ரேலின் இந்த படுகொலைகளுக்கு தமது கண்டனத்தையும் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து புத்தளம் வாழ் பொது மக்களினால் கண்டன அறிக்கையொன்றும் வாசிக்கப்பட்டது.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...