ஒல்லாந்தர் ஆட்சிகாலத்தில் இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சில தொல்பொருட்கள் மீண்டும் நாட்டிற்கு…!

Date:

1756ஆம் ஆண்டு ஒல்லாந்தர் ஆட்சிகாலத்தில் இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சில தொல்பொருட்கள் உத்தியோகபூர்வமாக மீண்டும் இன்றைய தினம் இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், குறித்த தொல்பொருட்கள், பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படவுள்ளன.

கொழும்பு தேசிய அருங்காட்சியகத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதத்தின் 5 ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளில் குறித்த தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெதர்லாந்தின் இராஜாங்க செயலாளர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தபோது 6 தொல்பொருட்களை இலங்கைக்கு மீண்டும் ஒப்படைப்பதற்கான உரிமை பரிமாற்றல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

ஒல்லாந்தர் ஆட்சி காலத்தில் இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டிருந்த 6 தொல்பொருட்கள், இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் மீண்டும் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்தநிலையில் இன்று அதிகாலை குறித்த தொல்பொருட்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இலங்கை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...