சீனாவில் கடந்த சில நாட்களாக அறியப்படாத புதிய நியூமோனியா நோய் பரவி வருகிறது.
அந்நாட்டின் பீஜிங், லியோனிங் உள்ளிட்ட மற்றும் பல நகரங்களில் உள்ள குழந்தைகள் வைத்தியசாலைகள் இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளால் நிரம்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வட சீனாவில் பரவி வரும் நோய் பற்றிய அனைத்து தகவல்களையும் வழங்குமாறு உலக சுகாதார நிறுவனம் சீனாவிற்கு அறிவித்துள்ளது.
அந்நாட்டில் உள்ள சிறுவர்களிடையே இந்த நோய் நிலை பொதுவாக காணப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நியூமோனியா நோய் தொற்று வட சீன குழந்தைகளிடையே பரவி வருவதாகவும், அதனை சீன அதிகாரிகள் மூடி மறைப்பதாகவும் தைவான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.