ஜாமிஆ நளீமியா நேர்முகப் பரீட்சை பிற்போடப்பட்டது!

Date:

பேருவளை ஜாமிஆ நளீமியா கலாபீடத்தின்  2023/2024ஆம் கல்வியாண்டிற்கான புதிய மாணவர்களை தெரிவு செய்வதற்கான நேர்முக மற்றும் எழுத்துப்பரீட்சைகளை 2023 டிசம்பர் 02 மற்றும் 03 ஆந் திகதிகளில் ஜாமிஆ நளீமிய்யா வளாகத்தில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இம்மாதம் மூன்றாம் வாரத்தில் வெளியிடப்படும் என்ற நம்பகமான தகவலின் அடிப்படையிலேயே மேற்குறிப்பிட்ட திகதிகளில் பிரவேசப் பரீட்சையை நடாத்த தீர்மானித்திருந்தோம்.

ஆயினும், நாம் எதிர்பார்த்த காலப்பகுதிக்குள் குறித்த பரீட்சை பெறுபேறுகள் வெளிவராத காரணத்தினால் பிரவேசப் பரீட்சையை குறித்த தினங்களில் நடாத்த முடியாதுள்ளது என்பதையும் அதனை பிற்போட தீர்மானித்துள்ளதாக ஜாமிஆ நளீமியா கலாபீடம் அறிவித்துள்ளது.

பிரவேசப் பரீட்சை இடம்பெறும் தினங்கள் குறித்து விரைவில் அறியத் தரப்படும்.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...