தபால் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று நள்ளிரவுடன் நிறைவு!

Date:

தபால் ஊழியர்கள் ஆரம்பித்த 48 மணித்தியால அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை இன்று (09) நள்ளிரவுடன் முடிவுக்குக் கொண்டுவரவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.

சுற்றுலா விடுதியொன்றை ஆரம்பிக்கும் போர்வையில் நுவரெலியா தபால் நிலைய கட்டிடம் மற்றும் கண்டி தபால் நிலைய கட்டிடம் என்பன விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தபால் ஊழியர்கள் நேற்று (08) முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவுக்கமைய தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று பிற்பகல் வெளியிடப்பட்டது.

அத்துடன், நேற்று முதல் 03 நாட்களுக்கு தபால் ஊழியர்களின் விடுமுறையை இரத்து செய்வதற்கும் தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.

எவ்வாறாயினும் தமது பிரச்சினைக்கான தீர்வை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்தவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...